
முகப்பு
யோகாவால் இணைக்கப்பட்ட கருத்து ஒற்றுமை கொண்ட இரு நபர்கள் லாக்டவுன் நாள் ஒன்றில் சாதாரணமாகப் பேசும்போது, அதன் விளைவு என்னவாக இருக்கும்?
அதன் விளைவு 'அன்பே யோகம்.'
யோகாவின் 3 அத்தியாவசிய பகுதிகளான உடற்பயிற்சி, உளவியல் முன்னேற்றம், மற்றும் வாழ்வியல் தத்துவங்களை அனைவரிடமும் எடுத்துச் செல்வதற்கான ஒரு தாழ்மையான முயற்சியே அன்பே யோகம்.
அன்பே யோகம் நிறுவனர்களாகிய, அனிஷா மஞ்சேனி மற்றும் ஜனன்யா, நாங்கள் இருவரும், இணையம் வழியாக, பிராணயாமா, ஆசனங்கள் மற்றும் தத்துவம் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றோம்.
எங்கள் வகுப்புகளின் வாயிலாக உங்களைச் சந்தித்து, யோகாவின் சிறப்புகளை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்!
சிலருக்கு உடலை வளைத்தல் யோகம்.
சிலருக்கு சுவாசித்தல் யோகம்.
சிலருக்கு சமநிலை யோகம்.
எங்களுக்கு 'அன்பு' யோகம்,
'காதல்' என்பதற்கான மற்றொரு தமிழ் சொல்.
அன்பு கடவுள் என்றால், அதற்கு வழிவகுக்கும் பாதைகளும் யோகமே, ஆதலால்
'அன்பே யோகம்'.